Monday, September 15, 2014

வடலூர் தருமசாலையில் விருந்தோம்பல் அவலம்


வடலூர் தருமசாலையில் விருந்தோம்பல் அவலம் சன்மார்க்கிகள் ஒன்று பட வேண்டிய இது தருணம் சன்மார்க்கிகள் ஒன்று பட வேண்டிய இது தருணம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி வள்ளலார் மலரடி வாழ்க இனம் சாதி சமயம் இல்லை என உரைத்து தருமசாலை தொடங்கினார் வள்ளல் பெருமானார் .அதற்கு அன்பர்கள் செலுத்தும் கொடைகள் அளப்பரியது அரசங்கத்தால் கட்டுப்படுத்தப் படும் இந்து அற்நிலையத்துறை அதிகாரிகள் நடத்தும் அன்னதானம் ஒவ்வொரு சன்மார்க்கியும் கண்டு கலங்கி வெட்கி தலை குனியும் நிலையில் உள்ளது அருட்பெருஞ்சோதியாண்டவர் அருட் துணிவுடன் வள்ளலார் பக்கத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கிறேன். வாழை இலை என்ற பெயரில் காய்ந்து பூஞ்சை பூத்துபோன சருகை நீரில் நனைத்து சாதம் அன்னம் என்ற பெயரில் சேறும் சகதியுமாய் புழுத்த அரிசி சோறு மாட்டுக் கஞ்சி தொட்டி சோற்றை அந்த காய்ந்த சருகில் ஒருவர் கொட்டிச் செல்ல பின்னாலே ஒருவர் சாம்பார் என்ற பெயரில் முற்றிய காய்கறிகள் போடப்பட்ட ரசம் போல் தயார் செய்யப்பட்ட புது திட திரவத்தை சோற்றின் மேலும் மன்னிக்கவும் அருட்பெருஞ்சோதி சேற்றின் மேலே கொட்டி செல்கிறார்கள். ஆனாலும் அந்த தருமசாலையில் ஆண்டவர் பேரருளால் சத்திய வாக்கால் அந்த உணவு அமிர்தமாய் அன்னை ஊட்டும் அமுதாய் சுவைக்கிறது.எப்படி சொல்வேன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆட்கொண்ட பெருமானார் கருணையை.....அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி என நம் கண்கள் கருணை குளமாகிறது. ஆண்டவர் அமுதென அந்த சாம்பர் + கூட்டு காய்கறியை பந்தியில் யாரும் திரும்ப கேட்டால் அவ்வளவுதான் கேட்டவர் கொஞ்சம் எளிமையாகவோ எழையாகவோ வயதனவராக இருந்தால் பந்திபறிமாறுபவர் முறைக்கும் முறைப்பில் அடங்கிடுவர். அதிலும் யாரும் துணிவுடன் மேலும் கேட்டால் ஒரு முறைதான் இல்ல போ ஆனாலும் இன்னும் ஒருவர் அழுத்தமாய் எனக்கு சாம்பார் வேண்டும் எனக் கேட்டால் ஆஜானு உடம்புடன் சிலர் வந்து என்ன என்ன கேட்டாய் சொன்னா உனக்கு ப் என சென்னை ஒரு புரியா கொச்.. மொழியில் பேசுகிறார், ஏதோ ஓர் இரக்கத்துக்கு கூட சாம்பார் கடைசிவரை ஊற்றவில்லை . உண்மையான சன்மார்க்க அன்பர்கள் அருட்பெருஞ்சோதியென ஆண்டவரிடம் விண்ணப்பித்து வெறும் சேற்றினை மட்டும் உண்டு அவ்விடம் விட்டு அமைதியாக கடந்து செல்கின்றனர். ஆனால் ரசம் எனும் பெயரிலே சில பல வண்ண பொடிகள் கலந்து நீர் வார்க்கிறார்கள் . ஒப்பந்தகார ரவுடி சண்டளர்கள் அந்த ரசம் மட்டும் மறுமுறை முறைக்காமல் தருகிறார்கள். சன்மார்க்கிகள் சாந்தம் உணவில் சுவை வேண்டாம் ஸாரி சரி. ஆனாலும் மீண்டும் ஒரு முறை எழுதுகிறேன். ஆனாலும் இந்த தருமசாலையில் ஆண்டவர் பேரருளால் சத்திய வாக்கால் அந்த உணவு அமிர்தமாய் அன்னை ஊட்டும் அமுதாய் சுவைக்கிறது.எப்படி சொல்வேன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆட்கொண்ட பெருமானார் கருணையை.....அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி என நம் கண்கள் கருணை குளமாகிறது.அங்கு குடிக்கும் தண்ணீரும் தீஞ்சுவையாக ஆகிறது. பசியோடு துன்பப் பட்டு உணவுக்கு மட்டுமே வரும் சீவர்கள் என் செய்வர். சன்மார்க்கிகள் ஆன்மநேயப் ஒருமை பாட்டுடன் விழித்து தனித்து ஒன்று பட்டு பசித்தவர்களுக்கு தயவு செய்ய தயாராகுவோமாக. எதிர் செயல் செய்யதவன் தான் சன்மார்க்கி அதற்காக நடக்கும் தவறை தட்டிக் கேட்பதில் தவறில்லையே ஒருவன் கை தட்டினால் கேட்காது எல்லோரும் ஒன்று பட்டு கை தட்டினால் சமயம் சார்பு இந்து அறநிலையத்துறை வசம் இருந்து காத்து வள்ளல் பெருமான் அருள் பெறுவோமாக

நீரோடையை வற்றாத தீஞ்சுவை ஊற்றாக வள்ளலார் மாற்றிய அற்புதம் அதிசயம் - Water course changed as Miracle Perennial fountain or Canal By VALLALAR , Sidhi valakam ,Mettukuppam Eastern site.


வள்ளலார் வரவழைத்த தீஞ்சுவை நீரோடை சித்திவளாகத் திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காணவருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது. அது முதல் அந்த நீரோடை ‘தீஞ்சுவை நீரோடை’ என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும், அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன. வள்ளலார் கரம்பட்டதும் சாதாரண நீரோடை, சக்தி வாய்ந்த நீரோடை ஊற்றாக ஆகிவிட்டது.வள்ளலார் உருவாக்கிய தீஞ்சுவை ஊற்று. இந்த தீஞ்சுவை நீருற்று நீரோடையில் இருந்து வரும் நீர் அருகில் ஏற்ப்படுத்தப்பட்ட குள்ம் போன்ற குட்டையில் நிறுத்திவைக்கப் பட்டு பின் விவசாய நிலத்துக்கு அனுப்ப படுகிறது. அதிகாலை நேரம் மூன்று முதல் நான்கு மணிக்குள் வள்ளலாரை சூட்சும உடலுடன் காண வரும் யோகிகள் சித்தர்கள் சன்மார்க்கிகள் இங்கு சூட்சுமாக நீராடுவதை சுத்த சீவர்கள் கண்ணால் காண்பதும் உணர்வதும் தத்ரூபமானது. இதை எழுதும் நான் நன்கறிந்துள்ளேன். உடல் பிணி பிடித்த பாவம் மற்றும் தோசங்கள் விலக அசைவம் முழுதும் துறந்து சீவர் கருணையுடன் சித்திவளாகம் சத்திய ஞான சபை தரும சாலை கண்டு சென்று இம்மையிலும் மறுமையிலும் வேண்டிய செல்வங்களை பெருவாழ்வு பெருவோமாக வள்ளலாரை குருவாகவோ வழி நடத்தும் ஆன்ம நேய சகோதர ஆத்மாவகவோ படைத்த இறைவனிடம் கூட்டி செல்லும் தெய்வமாகவோ கொள்வதற்க்கு தங்களுக்கு எந்த சாதி மதம் இனம் நாடு மொழி என எதுவும் தேவையில்லை. தாங்கள் நாம் சந்திக்கும் ஒவ்வொரு உயிருள்ள உயிர்களையும் அன்பு கருணை இரக்கத்துடன் முடிந்தவரை உதவுதல் என சார்புடையவராக இருப்பின் தாங்களும் வள்ளலாரின் அநுக்க சன்மார்க்கியாவீர் இது சத்தியம் சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம் கண்ட மாபெரும் தலைவர் திருஅருட்பிரகாச இராமலிங்க சுவாமிகள் எனும் வள்ளல் பெருமானார் இந்தப் புதிய சங்கத்தின் கொள்கைகளாக அவர் அறிவித்தவை, மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள். அவை: கடவுள் ஒருவரே. கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவிலோ அல்லது ஓளிக்கு முன் தோன்றும் வெட்ட வெளியில் வைத்து வழிபட வேண்டும். சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது. இன, நாடு, ஜாதி, மத மார்க்க வேறுபாடு கூடாது. பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும்.ஆதலால் மாமிச உணவை உண்ணக்கூடாது. பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்புமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தாங்கள் நாம் சந்திக்கும் ஒவ்வொரு உயிருள்ள உயிர்களையும் அன்பு கருணை இரக்கத்துடன் முடிந்தவரை உதவுதல் எனும் சீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங் களுக்கும் மேலானது. மேற்கண்ட பண்புகளுடன் திகழ்பவர்களுடன் தானும் இருந்து நம்மை கருணையுள் கருணையவர் மகான்களுக்கெல்லாம் மகான் ஆன வள்ளல் பெருமானர். இந்த மகான்களுக்கெல்லாம் மகான் வழங்கிய மஹா மந்திரம் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி ... இந்த மகான்களுக்கெல்லாம் மகான் வழங்கிய அருள் நெறி திருமுறைகள் ஆறு அதுவே திருஅருட்பா.