வடலூர் தருமசாலையில் விருந்தோம்பல் அவலம்
சன்மார்க்கிகள் ஒன்று பட வேண்டிய இது தருணம்
சன்மார்க்கிகள் ஒன்று பட வேண்டிய இது தருணம்.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி வள்ளலார் மலரடி வாழ்க
இனம் சாதி சமயம் இல்லை என உரைத்து தருமசாலை தொடங்கினார் வள்ளல் பெருமானார் .அதற்கு அன்பர்கள் செலுத்தும் கொடைகள் அளப்பரியது
அரசங்கத்தால் கட்டுப்படுத்தப் படும் இந்து அற்நிலையத்துறை அதிகாரிகள் நடத்தும் அன்னதானம் ஒவ்வொரு சன்மார்க்கியும் கண்டு கலங்கி வெட்கி தலை குனியும் நிலையில் உள்ளது அருட்பெருஞ்சோதியாண்டவர் அருட் துணிவுடன் வள்ளலார் பக்கத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கிறேன்.
வாழை இலை என்ற பெயரில் காய்ந்து பூஞ்சை பூத்துபோன சருகை நீரில் நனைத்து
சாதம் அன்னம் என்ற பெயரில் சேறும் சகதியுமாய் புழுத்த அரிசி சோறு மாட்டுக் கஞ்சி தொட்டி சோற்றை அந்த காய்ந்த சருகில் ஒருவர் கொட்டிச் செல்ல பின்னாலே ஒருவர் சாம்பார் என்ற பெயரில் முற்றிய காய்கறிகள் போடப்பட்ட ரசம் போல் தயார் செய்யப்பட்ட புது திட திரவத்தை சோற்றின் மேலும் மன்னிக்கவும் அருட்பெருஞ்சோதி சேற்றின் மேலே கொட்டி செல்கிறார்கள்.
ஆனாலும் அந்த தருமசாலையில் ஆண்டவர் பேரருளால் சத்திய வாக்கால் அந்த உணவு அமிர்தமாய் அன்னை ஊட்டும் அமுதாய் சுவைக்கிறது.எப்படி சொல்வேன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆட்கொண்ட பெருமானார் கருணையை.....அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி என நம் கண்கள் கருணை குளமாகிறது.
ஆண்டவர் அமுதென அந்த சாம்பர் + கூட்டு காய்கறியை பந்தியில் யாரும் திரும்ப கேட்டால் அவ்வளவுதான் கேட்டவர் கொஞ்சம் எளிமையாகவோ எழையாகவோ வயதனவராக இருந்தால் பந்திபறிமாறுபவர் முறைக்கும் முறைப்பில் அடங்கிடுவர். அதிலும் யாரும் துணிவுடன் மேலும் கேட்டால் ஒரு முறைதான் இல்ல போ ஆனாலும் இன்னும் ஒருவர் அழுத்தமாய் எனக்கு சாம்பார் வேண்டும் எனக் கேட்டால் ஆஜானு உடம்புடன் சிலர் வந்து என்ன என்ன கேட்டாய் சொன்னா உனக்கு ப் என சென்னை ஒரு புரியா கொச்.. மொழியில் பேசுகிறார், ஏதோ ஓர் இரக்கத்துக்கு கூட சாம்பார் கடைசிவரை ஊற்றவில்லை .
உண்மையான சன்மார்க்க அன்பர்கள் அருட்பெருஞ்சோதியென ஆண்டவரிடம் விண்ணப்பித்து வெறும் சேற்றினை மட்டும் உண்டு அவ்விடம் விட்டு அமைதியாக கடந்து செல்கின்றனர்.
ஆனால் ரசம் எனும் பெயரிலே சில பல வண்ண பொடிகள் கலந்து நீர் வார்க்கிறார்கள் . ஒப்பந்தகார ரவுடி சண்டளர்கள் அந்த ரசம் மட்டும் மறுமுறை முறைக்காமல் தருகிறார்கள்.
சன்மார்க்கிகள் சாந்தம் உணவில் சுவை வேண்டாம் ஸாரி சரி.
ஆனாலும் மீண்டும் ஒரு முறை எழுதுகிறேன்.
ஆனாலும் இந்த தருமசாலையில் ஆண்டவர் பேரருளால் சத்திய வாக்கால் அந்த உணவு அமிர்தமாய் அன்னை ஊட்டும் அமுதாய் சுவைக்கிறது.எப்படி சொல்வேன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆட்கொண்ட பெருமானார் கருணையை.....அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி என நம் கண்கள் கருணை குளமாகிறது.அங்கு குடிக்கும் தண்ணீரும் தீஞ்சுவையாக ஆகிறது.
பசியோடு துன்பப் பட்டு உணவுக்கு மட்டுமே வரும் சீவர்கள் என் செய்வர்.
சன்மார்க்கிகள் ஆன்மநேயப் ஒருமை பாட்டுடன் விழித்து தனித்து ஒன்று பட்டு பசித்தவர்களுக்கு தயவு செய்ய தயாராகுவோமாக. எதிர் செயல் செய்யதவன் தான் சன்மார்க்கி அதற்காக நடக்கும் தவறை தட்டிக் கேட்பதில் தவறில்லையே ஒருவன் கை தட்டினால் கேட்காது எல்லோரும் ஒன்று பட்டு கை தட்டினால்
சமயம் சார்பு இந்து அறநிலையத்துறை வசம் இருந்து காத்து வள்ளல் பெருமான் அருள் பெறுவோமாக
No comments:
Post a Comment